'நைட் 2.30 மணிக்கு போன் வந்துச்சு'.. 'பெண் என்ஜினியரின் வங்கிக் கணக்கில்' இருந்து லட்சக்கணக்கில் 'அபேஸ்' செய்த கும்பல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Nov 05, 2019 03:07 PM

மும்பையில் உள்ள கன்ஜூர்மார்க் காவல்நிலையத்தில் பெண் பொறியாளர் அளித்த டெபிட் கார்டு மோசடி புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Lady Engineer cheated for 3 1/2 lakhs using her debit card

அதன்படி, மகப்பேறு விடுமுறையில் இருந்த தனது வங்கி அக்கவுண்ட் இருந்த வங்கியில் இருந்து, கடந்த மாதம் 22-ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில், வந்த அலெர்ட் அழைப்பின்போது தனது வங்கிக் கணக்கில் இருந்து பணம் பறிபோனதாக அறிந்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர்தான் விசாரணையில், மும்பையில் பணிபுரியும் இந்த பெண் பொறியாளரின் டெபிட் கார்டினை, வெளிநாட்டைச் சேர்ந்த கும்பல் ஒன்று 56 முறைக்கும் மேலாக பயன்படுத்தி, ஏறக்குறைய மூன்றரை லட்சம் ரூபாய் பணத்தை அபேஸ் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதுபற்றி பேசும் சைபர் குற்றப் பிரிவு நிபுணர்கள், வெளிநாட்டு பரிவர்த்தனைகளுக்கு ஒன்-டைம்-பாஸ்வேர்டு தேவைப்படாததால் அதைப் பயன்படுத்திக் கொள்பவர்கள் இப்படியான குற்றங்களைச் செய்வதாகக் கூறி அதிரவைத்துள்ளனர்.

மேலும் ரிசர்வ் வங்கி விதிமுறைகளின்படி, வெளிநாட்டு பரிவர்த்தனையில் ஈடுபடாத வங்கி வாடிக்கையாளர்களின் பணம் மோசடி காரணமாக திருடுப் போனால், சேவையளிக்கும் அந்த குறிப்பிட்ட  வங்கியானது அடுத்த 10 நாட்களுக்குள் தனது வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டு என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

Tags : #DEBIT CARD #WOMAN #ENGINEER