'அண்ணா பல்கலைக்கழகம் பெயர் மாற்றப்படுமா?'... 'அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பதில்'... விவரம் உள்ளே!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jan 28, 2020 10:17 PM

அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்படும் விவகாரத்தில், அதன் பெயர் மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்தநிலையில், இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

No changing in Anna university name TN Minister JayaKumar

தமிழகத்தின் பொறியியல் கல்லூரிகளை ஒருங்கிணைத்து வழிநடத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் விவகாரம் தொடர்பாக  5 பேர் கொண்ட அமைச்சர்கள் குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது. அதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி,  ஜெயக்குமார்,  சி.வி.சண்முகம்,  அன்பழகன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர் தமிழக தலைமைச் செயலாளருடன் இன்று ஆலோசனை மேற்கொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், இட ஒதுக்கீட்டிற்கு எந்தவித பாதிப்பும் வராத வகையில் நடவடிக்கை எடுப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும், அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்பட்டாலும் பெயரில் எந்த மாற்றமும் இருக்காது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Tags : #DJAYAKUMAR #ENGINEERING #TN #CHENNAI #TAMILNADU