தமிழ்நாட்டில் கொரோனா..?: ''அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில...' 'தனி அறையில் வைத்து...' சீனாவில் இருந்து வந்த சாஃப்ட்வேர் இன்ஜினியர்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Jan 31, 2020 11:45 AM

சீனாவில் இருந்து தமிழகம் திரும்பிய பொறியாளர் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Namely to allow the engineer in China with Corona virus symptoms

சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள ஊஹான் பகுதியில் இருந்து மற்ற நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், சீனாவில் மட்டும் வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளது. 8,100 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தாய்லாந்து சிங்கப்பூர் ஆஸ்திரேலியா என இதுவரை 21 நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது. சீனாவின் ஊஹானில் இருந்து கேரளா திரும்பிய மருத்துவ மாணவி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே சீனாவில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்த சாப்ட்வேர் இன்ஜினியர் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

2 நாட்களாக சளி, இருமல் இருப்பதால் நேற்று  இரவு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து தனி அறையில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரின் ரத்த மாதிரிகள் சோதனைக்குப் பின்னர் கொரோனா வைரஸ் தாக்குதல் இருக்கிறதா என்பது உறுதியாக தெரியவரும் என்கிறனர் மருத்துவர்கள்.

Tags : #CORONAVIRUS