உலகிலேயே அதிக போக்குவரத்து நெருக்கடி... 'பெங்களூரு' முதலிடம்... "ஏம்பா சென்னை 'பல்லாவரம்', 'பெருங்களத்தூர்' பக்கம் ஆய்வு செஞ்சீங்களா..."

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Jan 30, 2020 07:19 AM

உலகத்திலேயே போக்குவரத்து நெருக்கடி மிகுந்த நகரங்களில் பெங்களூரூ முதலிடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

Bangalore tops most of the world\'s traffic jams

லொகேஷன் டெக்னாலஜி கம்பெனியான டாம் டாம் , உலகம் முழுவதும் போக்குவரத்து நெருக்கடியான நகரங்கள் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. இதற்காக 57 நாடுகளில் உள்ள 416 நகரங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வு முடிவுகளில், இந்தியா நகரங்களான பெங்களூரூ முதலிடத்திலும், மும்பை நகரம் 4வது இடத்திலும், புனே 5வது இடத்திலும் , தலைநகர் டில்லி 8வது இடத்திலும் உள்ளன. மேலும் பிலிப்பைன்சின் மணிலா, கொலம்பியாவின் பகோடா, ரஷ்யாவின் மாஸ்கோ, பெருவின் லிமா,  துருக்கியின் இஸ்தான்புல், இந்தோனேஷியாவின் ஜகர்த்தா ஆகிய நகரங்களும் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளது.

பெங்களூரு மக்கள் ஒரு ஆண்டிற்கு 243 மணிநேரங்களை போக்குவரத்து நெருக்கடியில் கழிக்கின்றனர். அதேபோல், மும்பை மக்கள், 209 மணி நேரங்களும், புனே நகரத்தினர் 193 மணிநேரங்களும், டில்லி மக்கள் 190 மணிநேரங்களும் இழக்கின்றனர் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

Tags : #BANGALURU #TRAFFIC JAM #MUMBAI #DELHI #PUNE #CHENNAI