VIDEO: 'பாதிக்கப்பட்ட' ஒரு பொண்ண 'இப்டித்தான்' நடத்துவீங்களா?... என்ன நடந்ததுன்னு 'நீங்களே' பாருங்க!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jan 30, 2020 10:36 PM

தன்னை திருமணம் செய்துகொள்ள தொல்லை கொடுத்து வந்த இளைஞர் ஒருவரை ஏற்காததால், டெல்லியில் கடந்த 2005-ம் ஆண்டு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த லட்சுமி அகர்வால் என்ற சிறுமி மீது திராவகம் (ஆசிட்) வீசப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு உள்ளானபோது லட்சுமி அகர்வாலுக்கு வயது 15.

Watch: Chennai People\'s Shocking Reaction to ACID VICTIM

திராவகம் வீசப்பட்டதில், முகம் வெந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார் லட்சுமி அகர்வால். தற்போது புதிய அறக்கட்டளை ஒன்றை தொடங்கி திராவக வீச்சில் பாதிக்கப்படுவோருக்காக அவர் குரல் கொடுத்து வருகிறார். இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘சப்பக்’ திரைப்படத்தில், பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான தீபிகா படுகோனே நடித்து அண்மையில் இந்தப் படம் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்நிலையில்,  சென்னையில் அதுபோன்று பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மக்களின் உதவும் குணம் மற்றும் அவர்களின் மனநிலை குறித்து, யாரையும் காயப்படுத்தும் நோக்கத்தில் எடுக்காமல், பிகைண்ட்வுட்ஸ் சார்பில் ஒரு வீடியோ எடுக்கப்பட்டது. விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, நடு ரோட்டில் சாலையில் பாதிக்கப்பட்டது போன்ற பெண் ஒருவர் நின்று கொண்டு உதவி கேட்கும்போது சிலர் உதவி புரிந்தாலும், சிலரின் ரியாக்ஷன் நம்மை வருத்தமடையச் செய்கிறது. அந்த வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Tags : #ATTACKED #ACIDATTACK #VICTIM #CHENNAI