‘உன்னோட இருக்கும்போதுதான் என்னை எனக்கே..’.. பனிமலையில் தோழியிடம் உருகிய கிரிக்கெட் வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Issac | Jan 03, 2020 04:41 PM
ரிஷப் பந்த் தனது தோழி இஷா நேகியுடன் பனிப்படர்ந்த மலையில் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படத்தை தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். தோனி அவரது மனைவி சாக்ஷியுடனும், கேப்டன் விராட் கோலி, தன் மனைவி அனுஷ்கா ஷர்மாவுடனும் சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு இரவில் நடனம் ஆடிய புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின.
முன்னதாக இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ஹிர்திக் பாண்டியாவும், நடிகை நடாஷாவிடம் தனது காதலை வெளிப்படுத்தி வீடியோ வெளியிட்டார். இந்த நிலையில் தற்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் தனது தோழி இஷா நேகியுடன் பனிப்படர்ந்த மலையில் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் “நான் உன்னுடன் இருக்கும் போது என்னை எனக்கு அதிகமாக பிடிக்கிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார். இதே புகைப்படத்தை இஷா நேகியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு “ஐந்தாவது ஆண்டாக தொடர்கிறது. உன்னை மிகவும் விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இவர்களது புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
