‘நாளை (ஜனவரி 3, 2020) சென்னை-யில் இங்கெல்லாம் பவர் கட்!’.. உங்க ஏரியாவும் இருக்கானு செக் பண்ணிக்கங்க!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Jan 02, 2020 06:54 PM
சென்னையில் பராமரிப்பு காரணமாக நாளை ஒருநாள் (ஜனவரி 03, 2020) சென்னையின் சில பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இதனால் சோழிங்கநல்லூர் பகுதியில் குறிப்பாக ஒ.எம்.ஆர் ரோடு, நூக்கம்பாளையம் ரோடு சந்திப்பு முதல் அலமேலு மங்காபுரம், பாலாஜி நகர், நடராஜன் நகர், நூக்கம்பளையம் முதல் டி.என்.எஸ்.சி.பி சந்திப்பு வரை நாளைய தினம் மின் தடை நிலவும்.
நீலாங்கரை பகுதியைப் பொருத்தவரை கோகினூர் காம்பௌக்ஸ், ராஜேந்திரேன் வளாகம் மற்றும் கார்டன், பாண்டியன் நகர், பிஸ்மில்லா நகர், இப்ராஹிம் தெரு, ஈ.சி.ஆர் மெயின் ரோடு, பாடசாலை, சங்கர் தெரு, வெட்டுவாங்கேணி, ராஜா நகர், பூம்புகார் தெரு, டீச்சர்ஸ் காலனி, வர்க்கர்ஸ் எஸ்டேட், கங்கையம்மன் கோயில் தெரு மற்றும் ஜான்ஸி தெரு உள்ளிட்ட இடங்களில் நாளை ஒருநாள் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
இதேபோல் பட்டினம்பாக்கம் பகுதிகளில் உள்ள பட்டினம்பாக்கம், மந்தவெளிப்பாக்கம், சாந்தோம், டி.என்.எச்.பி.குடியிருப்பு, சீனிவாசபுரம், டூமிங் குப்பம், மந்தவெளிப்பாக்கம், சாந்தோம் நெடுஞ்சாலை, போலிஸ் குடியிருப்பு, ரோகினி கார்டன், கற்பகம் அவென்யு, டிமோன்ட் தெரு, லயித் காஸ்டில் தெற்கு, மத்தியம், வடக்கு தெரு, தெற்கு கேனால் பாங்க் சாலை, நார்டன் ரோடு மற்றும் 1 முதல் 4-வது தெரு, டி.எஸ்.வி.கோயில் தெரு, ஆதாம் தெரு, கேசவப்பெருமாள் கோயில் தெரு, கிழக்கு மாடம் தெரு, வி.கே.ஐயர் ரோடு, மசுதி தெரு, 1 முதல் 6-வது மற்றும் 11 முதல் 14-வது டிரஸ்ட் குறுக்கு தெரு உள்ளிட்ட இடங்களிலும் நாளை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றைத் தொடர்ந்து பட்டினப்பாக்கம் பகுதியில் கச்சேரி ரோடு, பஜார் ரோடு, நொச்சிக்குப்பம், தேவாடி தெரு, வடக்கு மாடம் தெரு, அப்பு தெரு, நொச்சி நகர், அப்பு முதலி தெரு, டூமிங் தெரு, ரோசரி சர்ச் ரோடு, குயில் தோட்டம், முத்து தெரு, புது தெரு, சி.ஐ.டி.குடியிருப்பு, சி.பி.ஐ ஆபிசர், திடீர் நகர் நடுத் தெரு சுந்தரேஸ்வரர் கோயில் தெரு, சித்திரகுளம் வடக்கு மற்றும் தெற்கு தெரு ஆகிய இடங்களிலும் நாளைய தினம் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
