'ராட்சத ராட்டினத்தில்.. சிக்கிக் கொண்ட சிறுமியின் தலை!'.. 'காப்பாற்றாமல்', ஆபரேட்டர் செய்த காரியம்.. சென்னையில் நடந்த பதைபதைப்பு சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Dec 31, 2019 10:18 AM

சென்னையைச் சேர்ந்த பிரபல தனியார் விளையாட்டு பூங்காவில் உள்ள ராட்சத ராட்டினத்தில் சிறுமியின் தலை சிக்கிக் கொண்ட சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியது.

little girls head trapped in chennai private park carousel

சென்னை பெசண்ட் நகர் கடற்கரை அருகே உள்ள தனியார் விளையாட்டு பூங்காவிற்கு விளையாடுவதற்காக, கேரளாவைச் சேர்ந்த சல்மா என்கிற சிறுமி தன் பெற்றோருடன் சென்றுள்ளார். அப்போது சிறுமியின் தலை, ராட்சத ராட்டினத்தின் பக்கவாட்டுக் கம்பிகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டது.

அதன் பின்னர் அங்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி சிறுமியை மீட்டனர். போதிய பாதுகாப்பு வசதிகள் இந்த பூங்காவில் செயல்முறைப்படுத்தப் படவில்லை என்று இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

இத்தனை ஆபத்திலும் சிறுமியை மீட்பதற்கு உண்டான நடவடிக்கையில் ஈடுபடாமல், தப்பியோடிவிட்ட ஆபரேட்டரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Tags : #PARK #CHENNAI