முடிவடையும் ‘பருவமழை’... அடுத்த 2 நாட்கள் ‘மழைக்கு’ வாய்ப்பு... ‘சென்னை’ வானிலை ஆய்வு மையம் தகவல்...
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Saranya | Dec 30, 2019 01:53 PM
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த வருடம் இயல்பை விட 2 சதவீதம் அதிகம் பெய்துள்ளதாகவும், சென்னை உள்ளிட்ட ஒரு சில வட மாவட்டங்களைத் தவிர அனைத்து மாவட்டங்களிலும் இயல்பான அளவை விட அதிகமாக மழை பெய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை காலம் டிசம்பர் 31-ஆம் தேதி அதாவது நாளையுடன் முடிவடைகிறது. இருப்பினும் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சென்னையில் இந்த ஆண்டு இயல்பான அளவை விட 19 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.