'ஆசையா அம்மா வாங்கிட்டு வந்தாங்க'... 'எமனாக வந்த போண்டா'... சென்னையில் நடந்த அதிர்ச்சி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Jan 03, 2020 12:19 PM

தொண்டையில் போண்டா சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Woman Dies After Bonda Gets Trapped in Throat in Chennai

சென்னை சூளைமேட்டில் வகித்து வருபவர் கங்காதரன். ராயப்பேட்டையில் உள்ள இருசக்கர வாகன உதிரி பாகங்கள் கடையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பத்மாவதி. இருவருக்கும் திருமணமாகி 11 ஆண்டுகள் ஆன நிலையில் இருவருக்கும் குழந்தை இல்லை. இதனால் பத்மாவதி தனது கணவருடன் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று பத்மாவதியின் தாயாரிடம் போண்டா சாப்பிட ஆசையாக இருக்கிறது என கேட்டுள்ளார். இதனால் அவர் போண்டா வாங்கி வந்துள்ளார். அப்போது பத்மாவதி சாப்பிட்ட சிறுது நேரத்தில் அது அவரது தொண்டையில் சென்று சிக்கியுள்ளது. இதனால் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தயார், உடனடியாக ஆம்புலஸ்க்கு தகவல் தெரிவித்து கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்கள். இதனை கேட்டு பத்மாவதியின் தாயார் கதறி அழுதார். போண்டா சாப்பிடும் போது பெண் உயிரிழந்துள்ள சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #BONDA #CHENNAI #TRAPPED #THROAT