‘ரூ.10-க்கு சென்னையை சுற்றிப் பார்க்கலாம்’!.. ‘அதிரடி புத்தாண்டு சலுகை’.. அசத்திய தமிழக அரசு..! எங்கெல்லாம் போகலாம்..?
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Dec 30, 2019 04:36 PM
புத்தாண்டு அன்று ரூ.10 கட்டணத்தில் சென்னை சுற்றிப் பார்க்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

வரும் 2020-ம் ஆண்டு புத்தாண்டு விடுமுறையை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடும் விதமாக தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜனவரி 1ம் தேதி அன்று ஒரு நாள் மட்டும் ரூ.10 கட்டணத்தில் சென்னையை சுற்றிப் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், தீவுத் திடல் தொடங்கி மெரினா கடற்கரை, விவேகானந்தர் இல்லம், கலங்கரை விளக்கம், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி பேராலயம், அஷ்டலட்சுமி கோயில், ஆறுபடை முருகன் கோயில், கிண்டி குழந்தைகள் பூங்கா ஆகிய இடங்களுக்கு சென்று திரும்பும் வகையில் சுற்றுலா மேற்கொள்ளலாம். சுற்றுலா பயணிகள் ஒரு இடத்தில் இருந்து அடுத்த சுற்றுலா மையத்திற்கு அழைத்துச் செல்லும் குறிப்பிட்ட இடங்களில் எங்கு வேண்டுமானாலும் ஏறலாம், இறங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது காலை 9 மணியில் இருந்து மாலை 6 மணி வரை செல்லத்தக்கது என குறிப்பிடப்பட்டுள்ளது.
