'குளிக்கும் போது ‘இன்ஸ்டாகிராமில்' வீடியோ கால்'...'ஆடிப்போன மாணவி'...சென்னையில் நடந்த பகீர் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Dec 30, 2019 10:02 AM

பெண் போல பேசி, பள்ளி மாணவி குளிப்பதை ஆபாச வீடியோ எடுத்த சம்பவம் சென்னையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai: Man Records Nude Video of Girl, Blackmails over Sexual Favour

சென்னையை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவருக்கு இன்ஸ்டாகிராமில் மகேஷ் என்ற வாலிபர் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். முதலில் நட்பாக பழகிய அவர், நாட்கள் செல்ல செல்ல மிகவும் நெருக்கமாக பழகியுள்ளார். ஒரு கட்டத்தில் மாணவியை தவறான உறவுக்கு அழைக்கும் வகையில் மகேஷ் பேசினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, மகேசுடன் ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் பேசுவதை நிறுத்தி விட்டார்.

இதனால் என்ன செய்வது என தெரியாமல் இருந்த மகேஷ் , ‘கவுசல்யா’ என்ற பெயரில் புதிதாக ஒரு கணக்கை தொடங்கி அதன் மூலம் மாணவியிடம் பெண் போல் நடித்து பழகினார். பெண்தான் என நினைத்து, மாணவியும் அவருடன் பேசி வந்தார். ஒரு கட்டத்தில் நாம் இருவரும் வீடியோ காலில் பேசலாம் என அழைத்த மகேஷ், கவுசல்யா என்ற பெயரில் பெண் குரலில் மாணவியிடம் ‘இன்ஸ்டாகிராமில்’ வீடியோ காலில் பேசினார்.

அப்போது மாணவி, வீட்டில் குளித்துக்கொண்டே வீடியோ காலில் பேசினார். அதனை பார்த்து ரசித்த மகேஷ், இது தான் சரியான சந்தர்ப்பம் என நினைத்து மாணவி குளித்ததை ரெகார்ட் செய்து கொண்டார். பின்னர் தனது சுயரூபத்தை காட்டிய மகேஷ், அந்த ஆபாச வீடியோவை வெளியிடாமல் இருக்க தன்னுடன் உறவுக்கு வருமாறு அழைத்துள்ளர். இதனை கேட்டு ஆடிப்போன அந்த மாணவி, கவுசல்யா என்ற கணக்கில் தன்னுடன் பேசி வந்தது மகேஷ் என்று அப்போது தான் அந்த மாணவிக்கு புரிந்தது.

மகேஷ் தொடர்ந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்க அவர், நடந்த சம்பவங்களை தனது தாயிடம் கூறி அழுதுள்ளார். இதையடுத்து சென்னை அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து புகார் அளித்துள்ளார்.  இதையடுத்து பள்ளி மாணவியை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியதாக மகேசை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அதில் இருந்த அனைத்து வீடியோக்கள் மற்றும் படங்களை அழித்தனர்.

படிக்கும் வயதில் இருக்கும் பதின் பருவ பிள்ளைகளை அவரது பெற்றோர்கள் மிகுந்த அக்கறையோடு கண்காணிக்க வேண்டும். இந்த வயதில் சமூகவலைத்தளங்களுக்கு அடிமையாவதை தவிர்க்க பெற்றோர்கள் மிகுந்த அக்கறையோடு செயல்பட வேண்டும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.

Tags : #SCHOOLSTUDENT #INSTAGRAM #CHENNAI #PRIVATE VIDEO #BLACKMAILS #SEX #VIDEO CALL