‘ரயிலைப் பிடிக்க’.. ‘அவசரத்தில் பயணி செய்த காரியம்’... ‘சென்னை எழும்பூரில் பதறிய மக்கள்’... 'துரிதமாக செயல்பட்ட போலீஸ்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் ஓடும் ரயிலில் ஏற முயன்று பயணி ஒருவர் தவறி விழ இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் காலை நேரத்தில் மிகவும் பரபரப்பாக இருக்கும். இந்நிலையில், இன்று காலை 6.45 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து தாதர் விரைவு ரயில், மும்பை செல்வதற்காக புறப்பட்டது. ரயில் பிளாட்பாரத்தை விட்டு நகர ஆரம்பித்த வேளையில் தாமதமாக வந்தப் பயணி ஒருவர், ஓடி வந்து, தனது லக்கேஜ்களுடன் ஓடும் ரயிலில் ஏற முயன்றார். லக்கேஜ்கள் அதிகம் இருந்ததால், பேலன்ஸ் தவறியது. இதனைப் பார்த்த அங்கிருந்த மக்கள் பதறிப் போயினர்.
அப்போது நிலைத் தடுமாறி கீழே விழ இருந்த அந்தப் பயணியை, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆர்.பி.எப். தலைமைக் காவலர் விஜயகுமார் துரிதமாக பிடித்துக் கொண்டார். பின்னர் ஓடும் ரயில் பெட்டியின் உள்ளே தள்ளி, அந்தப் பயணியை காப்பாற்றினார். இந்த சம்பவத்தின் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியது. பயணியை தக்க சமயத்தில் காப்பாற்றிய காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்தன. இந்த சம்பவத்தால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.
