‘பெண்ணை கட்டிக்கொடுக்க மறுத்த அத்தை’.. நடுராத்திரி இளைஞர் செஞ்ச கொடூரம்.. அதிர்ச்சியில் உறைந்த கிராமம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jan 22, 2020 05:05 PM

அத்தை பெண்ணை திருமணம் செய்துவைக்க மறுத்த ஆத்திரத்தில் பெண்ணின் வீட்டுக்கு தீ வைத்துக் கொளுத்திய இளைஞரால் பரபரப்பு ஏற்படுட்டுள்ளது.

Man sets woman’s house on fire for rejecting his proposal

ஆந்திர பிரதேசம் கோதாவரி மாவட்டம் கடியம் அருகே உள்ள துல்லா கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாஸ். இவர் அப்பகுதியில் உள்ள தனது அத்தை சத்யாவதியின் மகளை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தனது அத்தையிடம் தெரிவித்து திருமணத்திற்கு பெண் கேட்டுள்ளார். ஆனால் சத்யாவதி பெண் தர மறுத்துள்ளார். இதனிடையே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வேறொருவருடன் மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த சீனிவாஸ் அத்தை சத்யாவதியின் வீட்டுக்கு சென்று அவரிடம் தகராறு செய்துள்ளார். இதனை அடுத்து சீனிவாஸ் மீது சத்யாவதி போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இந்த நிலையில் நேற்றிரவு சுமார் 1 மணியளவில் சத்யாவதியின் வீட்டுக்கு சீனிவாஸ் வந்துள்ளார். பின்னர் வீட்டின் கதவை வெளிபுறமாக பூட்டிவிட்டு பெட்ரோல் ஊற்றி வீட்டைக் கொளுத்தியுள்ளார். அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்துள்ளனர். அப்போது திடீரென வீட்டுகுள் தீ எரிவதைக் கண்டு அலறியுள்ளார்.

சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றுள்ளனர். இதில் சத்யாவதியின் மகன் ராமு (18), சகோதரியின் மகள் விஜயலட்சுமி (5) ஆகியோர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த சத்யாவதி, சகோதரி துர்கா மற்றும் அவரது மகள்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில் சத்யாவதி மற்றும் துர்கா ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள சீனிவாஸை தீவிரமாக தேடி வருகின்றனர். பெண் தர மறுத்த ஆத்திரத்தில் அத்தையின் வீட்டை தீ வைத்துக் கொளுத்திய இளைஞரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : #CRIME #MURDER #ANDHRAPRADESH #FIRE