பெண்களின் ‘உள்ளாடைகள்’, செருப்புகளைக் ‘குறிவைத்து’... கோவையை ‘பதறவைக்கும்’ சைக்கோ ‘திருடன்’...
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவையில் பெண்களின் உள்ளாடைகள் மற்றும் செருப்புகளைக் குறிவைத்து திருடும் சைக்கோ திருடன் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கோவை மாவட்டம் துடியலூரில் உள்ள மீனாட்சி கார்டன் குடியிருப்பு பகுதியில் பெண்களின் உள்ளாடைகள் மற்றும் செருப்புகள் மர்மமான முறையில் திருடுபோயுள்ளன. இதையடுத்து இப்படி பல குடியிருப்புகளில் இருந்து ஒரே நேரத்தில் காணாமல்போன உள்ளாடைகளும், செருப்புகளும் ஆளில்லாத ஒரு வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி மீண்டும் அதேபோல பெண்களின் உள்ளாடைகள் மற்றும் செருப்புகள் காணாமல் போயுள்ளன. பின்னர் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்தபோது, ஒரு மர்ம நபர் அவற்றை திருடிச் செல்வது தெரியவந்துள்ளது. அந்த சிசிடிவி காட்சிகளை வைத்து அப்பகுதியினர் போலீசாரிடம் இதுபற்றி புகார் அளித்துள்ளனர்.
ஏற்கெனவே இப்பகுதியில் வீட்டின் பெட்ரூம் ஜன்னல்களை மட்டும் எட்டிப் பார்க்கும் மர்ம நபர் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. அதனால் இரண்டும் ஒரே நபரின் வேலையாக இருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.
