‘ஒட்டுமொத்த’ குடும்பத்திற்கும் ‘அடுத்தடுத்து’ நேர்ந்த கொடூரம்... கடிதத்தில் இருந்த ‘உறையவைக்கும்’ காரணம்... ‘அதிரடி’ தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Mar 12, 2020 11:15 AM

கடன் தொல்லை காரணமாக தனது குடும்பத்தினர் 4 பேரை கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை விதித்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Chengalpattu Man Sentenced To Death For Killing 4 Family Members

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர் தாமோதரன் (எ) பிரகாஷ் (40). இவர் பம்மல் பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வந்துள்ளார். இவருடைய மனைவி தீபா (35), குழந்தைகள் ரோஷன் (7), மீனாட்சி (4). இவர்களுடன் தாமோதரனின் தாய் சரஸ்வதியும் (60) வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜவுளி வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடன் சுமை அதிகரித்ததால் விரக்தியில் இருந்துவந்த தாமோதரன் 2017ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியால் மனைவி தீபாவை கொலை செய்துள்ளார். அப்போது தீபாவின் அலறல் சத்தம்கேட்டு அங்கு ஓடிவந்த தாய் சரஸ்வதியையும் தாமோதரன் கொலை செய்துள்ளார். பின்னர் அறையில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் 2 பேரையும் குத்தி கொலைசெய்துள்ளார்.

இதையடுத்து கடன் தொல்லையால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதிவைத்துவிட்டு, தனது கழுத்தை தானே அறுத்துக் கொண்டு தாமோதரன்  தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைத்தொடர்ந்து தீபா குடும்பத்தினர் அளித்த தகவலால் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த அனைவரையும் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அதில் தாமோதரனை தவிர அனைவரும் ஏற்கெனவே இறந்திருக்க, தாமோதரன் மட்டும் சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்துள்ளார். இதுகுறித்த வழக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன் தாமோதரனுக்கு தூக்கு தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்துள்ளார்.

Tags : #CRIME #MURDER #MONEY #CHENGALPATTU #MAN #FAMILY #DEBT