'செல்பி' எடுக்காதீங்க, யாரையும் தொடாதீங்க ... 'ஒரு நாள்' போட்டிக்கு முன்னதாக ... வழிமுறைகளை வகுத்த 'பிசிசிஐ' !

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Mar 12, 2020 11:13 AM

இந்தியா - தென்னாபிரிக்க தொடரின் போது கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க வேண்டி வீரர்களுக்கு சில வழிமுறைகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

BCCI releases some important instructions for players

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று ஒரு நாள் போட்டிகளை ஆடவுள்ளது. முதல் ஒரு நாள் போட்டி இன்று மதியம் தர்மசாலாவில் நடைபெறவுள்ளது. கொரோனா வைரஸ் பீதி இந்தியா முழுவதுமுள்ள நிலையில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் போட்டி நடைபெறும் என்பது உறுதியான நிலையில் பிசிசிஐ கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து வீரர்களை தற்காத்துக் கொள்ள அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், 'அணியின் மருத்துவக் குழு, கொரோனா வைரசின் தற்போதைய நிலை குறித்து கவனித்து வருகிறது. மேலும் வீரர்கள் போட்டியின் போது என்னென்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்பதை தெரிவித்துள்ளோம்' என்றது. 'சோப்பு மற்றும் தண்ணீரால் கைகளை கழுவுதல், கையை சுத்தம் செய்தல், தும்மல் மற்றும் இருமலின் போது வாயை மறைத்துக் கொள்ளுதல், உடல்நலக்குறைவு ஏற்பட்டால் மருத்துவக்குழுவிடம் தெரிவித்தல், தெரியாதவர்களுடன் செல்பி எடுப்பதோ, அவர்களை தொடுவதோ தவிர்த்தல் வேண்டும்' என வழிமுறைகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : #IND VS SA #BCCI #CORONA VIRUS