உணவு ‘டெலிவரி’ செய்வதுபோல... நாள் கணக்கில் ‘நோட்டமிட்டு’ பிளான் போட்ட இளைஞர்கள்... 50 ‘சிசிடிவி’ கேமராக்களை ஆராய்ந்து... வளைத்துப் பிடித்த ‘சென்னை’ போலீசார்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Mar 09, 2020 07:21 PM

சென்னையில் உணவு டெலிவரி செய்வதுபோல நோட்டமிட்டு செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Chennai Food Delivery Boys Arrested For Chain Snatching

சென்னை முகப்பேர் கிழக்கு புகழேந்தி சாலையை சேர்ந்தவர் லதா (52). கடந்த மாதம் 21ஆம் தேதி மளிகைக் கடைக்கு சென்ற லதாவிடம் 2 மர்ம நபர்கள் 11 பவுன் தாலி செயினை பறித்துச் சென்றுள்ளனர். இதையடுத்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் இருந்த 50க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து முடிவில் வேலூரைச் சேர்ந்த கோபி (35), ஆவடியைச் சேர்ந்த சிவனேசன் (20) ஆகியோரைக் கைது செய்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் இருவரும் உணவு டெலிவரி செய்துவந்ததும், அதில் கிடைத்த வருமானம் போதாததால் செயின் பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் உணவு டெலிவரி செய்வதுபோல அப்பகுதியில் உள்ள வீடுகளை நோட்டமிட்டு வந்ததும், லதாவிடம் செயின் பறிப்பதற்கு முன்பாக 3 நாட்கள் அவருடைய செயல்பாடுகளை கவனித்து பின்னரே அவரிடம் செயினை பறித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags : #CRIME #POLICE #CHENNAI #FOOD #DELIVERY #BOYS