‘உடம்புல காயம் இருக்கு’.. ‘மடியில் மயங்கி விழுந்த 1ம் வகுப்பு மாணவி’.. திருப்பத்தூர் அருகே பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Mar 11, 2020 03:06 PM

திருப்பத்தூர அருகே ஒன்றாம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tirupattur class 1 student mysterious death at private school

திருப்பத்தூர் அடுத்த புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன். இவரது மனைவி மது. இவர்களுக்கு தேவதர்ஷினி என்ற 5 வயது மகள் இருந்தார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். குடும்ப வறுமை காரணமாக பச்சையப்பனும், மதுவும் கும்பகோணத்தில் தங்கி பணியாற்றி வருகின்றனர். இதனால் பாட்டி ஹரியம்மாளின் (69) அரவணைப்பில் தங்கி தேவதர்ஷினி பள்ளிக்கு சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று பள்ளிக்கு சென்ற மாணவி மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனை அடுத்து பள்ளி வளாகத்தில் மாணவி மயக்கமடைந்து விழுந்ததாகவும், அதனால் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருப்பதாகவும் பள்ளி நிர்வாகத்திடம் இருந்து சிறுமியின் பாட்டிக்கு தகவல் வந்துள்ளது. உடனே பதறி அடித்துக்கொண்டு உறவினர்களை உடன் அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

ஆனால் மருத்துவமனையில் பேத்தி சடலமாக கிடந்ததைக் கண்டு கதறி அழுத ஹரியம்மாள், பேத்தியின் உடம்பில் காயம் இருப்பதாகவும், அவரது இறப்பில் மர்மம் இருப்பதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விரைந்து வந்த காவல் துறையினர் பள்ளி நிர்வாகத்திடன் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது பள்ளி நிர்வாகத்தின் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவியின் உறவினர்கள் சாலையில் போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தெரிவித்த பள்ளி நிர்வாகம், மாணவி ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், அதனால் அடிக்கடி விடுமுறை எடுத்ததாகவும் தெரிவித்துள்ளனர். கடந்த 10 நாட்களாகதான் பள்ளிக்கு மாணவி விடுப்பு எடுக்காமல் வந்துள்ளார். நேற்று மாலை பள்ளி வளாகத்தில் விளையாடிக்கொண்டிருந்த மாணவி திடீரென மயங்கி அருகில் உள்ள மாணவியின் மடியில் சாய்ந்தார். உடனே மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். பெற்றோருக்கு போன் செய்தோம். அவர்கள் எடுக்கவில்லை. உடனே பள்ளி வேன் டிரைவரை அனுப்பி குழந்தையின் பாட்டியை வரவழைத்தோம். பரிசோதனையில் குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். பள்ளி மீது எந்த தவறும் என்பதை நிரூபிக்க மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வலியுறுத்தினோம் என தெரிவித்துள்ளனர்.

News Credits: Vikatan

Tags : #CRIME #SCHOOLSTUDENT #TIRUPATTUR