‘ரொம்ப நேரமா பூட்டியிருந்த கதவு’.. ‘உடைச்சு உள்ளே போன போலீஸ்’.. முன்னாள் காதலிக்கு நடந்த பயங்கரம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Mar 11, 2020 01:21 PM

டெல்லியில் இளைஞர் ஒருவர் முன்னாள் காதலி மற்றும் அவரது தாயை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Delhi youth enters flat, kills ex-girlfriend and her mother

டெல்லியில் உள்ள வசுந்தரா என்க்ளேவ் என்ற அப்பார்ட்மெண்டில் சுமிதா மேரி மற்றும் அவரது மகள் சமிர்தா (25) என்பவர் வசித்து வந்துள்ளனர். சமிர்தா, விக்ராந்த் என்ற நபரை காதலித்து வந்துள்ளார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விக்ராந்திடம் இருந்து பிரிந்து வந்த சமிர்தா, வேறொரு நபரை காதலித்ததாக கூறப்படுகிறது. இதனால் சமிர்தாவை கொலை செய்ய விக்ராந்த் திட்டமிட்டுள்ளார்.

சம்பவத்தன்று சமிர்தாவின் வீட்டுக்கு வெளியே தனது நண்பர் பிரயாக்குடன் காத்திருந்துள்ளார். இரவு 11 மணியளவில் சமிர்தா காரில் வீட்டுக்கு வந்துள்ளார். உடனே அவரை பின் தொடர்ந்து விக்ராந்த் மற்றும் அவரது நண்பர் பிரயாக் சென்றுள்ளனர். இவை அனைத்தும் அப்பார்மெண்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதனை அடுத்து காலை வழக்கம்போல வந்த வேலைக்காரர் சமிர்தாவின் வீட்டுக் கதவை தட்டியுள்ளார். ஆனால் நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளார். உடனே அவர்கள் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது சமிர்தா மற்றும் அவரது தாய் சுமிதா மேரி ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளனர். உடனே இருவரின் சடலங்களையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இதுகுறித்து சமிர்தாவின் தோழி புகார் கொடுத்துள்ளார். இந்த நிலையில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விக்ராந்த் மற்றும் அவரது நண்பர் பிரயாக் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : #CRIME #MURDER #DELHI #GIRLFRIEND #MOTHER