'நள்ளிரவில் நடந்த கொடூரம்'... 'கதறி துடித்த சர்ச் ஊழியர்'... சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Mar 12, 2020 09:05 AM

தேவாலயத்தில் ஊழியர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chennai : Church worker stabbed to death in Avadi

சென்னை ஆவடியை அடுத்த பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்தவர் ஈனேஷ். மத்திய பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர், வள்ளலார் நகரில் உள்ள தேவாலயத்தில் ஊழியம் செய்து வருகிறார். வழக்கமாக ஈனேஷ் தேவாலயத்தில் லைட் போடுவது வழக்கம். அந்த வகையில் நேற்றிரவு தேவாலயத்தில் லைட் போடுவதற்காகச் சென்ற ஈனேஷ் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது நண்பர்கள் தேவாலயத்திற்குச் சென்று பார்த்துள்ளனர்.

அப்போது அவர்கள் கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியில் உறையச் செய்தது. தேவாலயத்திற்குச் சென்ற ஈனேஷ் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார். இதையடுத்து சம்பவம் குறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் தேவாலயத்திற்கு வரும் மோசஸ் என்பவர் ஈனேஸை மூன்று முறை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அலர்ட்டான காவல்துறையினர் தப்பியோடிய மோசஸை தாம்பரம் ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்தனர். எதற்காக ஈனேஷ் கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் ஆவடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #MURDER #KILLED #CHENNAI #CHURCH WORKER #STABBED #AVADI