கிரெடிட், டெபிட் கார்டு ‘பயனாளர்கள்’ கவனத்திற்கு... மார்ச் ‘16ஆம் தேதிக்குள்’ பயன்படுத்தாவிட்டால்... இனி ‘இந்த’ சேவையை பயன்படுத்த முடியாது...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Mar 09, 2020 04:15 PM

கிரெடிட், டெபிட் கார்டுகளை ஆன்லைன் பரிவர்த்தனைக்காக பயன்படுத்தவில்லை என்றால் நிரந்தரமாக அவற்றை ஆன்லைன் பரிவர்த்தனைக்காக பயன்படுத்த முடியாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Debit Credit Cards To Be Disabled For Online Use If Not Used

சமீப காலமாக டெபிட், கிரெடிட் கார்டு மூலமாக நடைபெறும் மோசடிகள் அதிகரித்துவரும் நிலையில், அதைத் தடுக்கும் வகையில் அனைத்து வங்கிகளும் தங்கள் பயனாளர்களுக்கு சிப் பொருத்தப்பட்ட புதிய டெபிட், கிரெடிட் கார்டுகளை வழங்கியுள்ளன.

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில், “புதிதாக வழங்கப்பட்ட டெபிட், கிரெடிட் கார்டுகளை வாடிக்கையாளர்கள் ஆன்லைன் பரிவர்த்தனைக்காக பயன்படுத்தியிருக்க வேண்டும். இல்லையென்றால், மார்ச் 16ஆம் தேதி முதல் சர்வதேச பரிவர்த்தனை மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியாது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, மார்ச் 16ஆம் தேதி முதல் ஆன்லைன் பரிவர்த்தனைக்காக பயன்படுத்தப்படாத புதிய கார்டுகள் மூலம் சர்வதேச பரிவர்த்தனையோ, ஆன்லைன் பரிவர்த்தனையோ செய்ய முடியாது. ஆனால் ATM, கடைகளில் ஸ்வைப் செய்யும் POS கருவிகள் மூலம் அந்த கார்டுகளை பயன்படுத்துவதில் எந்த சிக்கலும் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #RBI #MONEY #CREDITCARD #DEBITCARD #ONLINE #TRANSACTION