திருமணம் செய்துவைத்த ‘நண்பனே’ செய்த கொடூரம்... தப்பித்த ‘6 மாத’ குழந்தை... இளம் ‘தம்பதிக்கு’ நேர்ந்த ‘நடுங்கவைக்கும்’ சம்பவம்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Mar 10, 2020 02:13 PM

சேலத்தில் கணவன் -  மனைவி உட்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

Salem Friends Shocking Confession In Husband Wife Murder Case

சேலம் திருமலைகிரி பகுதியில் வெள்ளிப்பட்டறை நடத்தி வரும் தங்கராஜ் என்பவரிடம் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த தம்பதியான ஆகாஷ் - வந்தனா மற்றும் அவருடைய உறவினர் சன்னிகுமார் ஆகிய 3 பேரும் வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு அவர்கள் 3 பேரும் அவர்களுடைய வீட்டில் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது ஆகாஷின் வீட்டருகே வசித்துவந்த இளைஞர்கள் 4 பேர் சம்பத்தன்று தப்பிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அந்த இளைஞர்களுடைய வீட்டில் சோதனை நடத்திய போலீசார், அங்கிருந்த மது பாட்டில்களை வைத்து மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகித்துள்ளனர். பின்னர் தப்பிச் சென்ற வினோத், தினேஷ், சுராஜ், விஜி என்ற அந்த 4 பேரும் கேரள போலீசார் உதவியுடன் பாலக்காடு ரயில் நிலையத்தில் பிடிபட்டுள்ளனர். 

இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், சம்பவத்தன்று குடிபோதையில் வினோத் வந்தனாகுமாரியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதும், அப்போது ஏற்பட்ட மோதலில் அந்த கும்பல் அவர்கள் 3 பேரையும் கொலை செய்ததும் தெரியவந்துள்ளது. மேலும் ஆகாஷுக்கும் வந்தனாவிற்கும் 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து வைத்ததே அவர்களுடைய நண்பணான வினோத் தான் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று ஆகாஷ் வீட்டில் இருந்த 3 பேரும் கொலை செய்யப்பட்ட நிலையில், ஆகாஷ் - வந்தனா தம்பதியின் 6 மாத குழந்தை மட்டும் இதில் தப்பித்துள்ளது.

Tags : #CRIME #MURDER #SALEM #HUSBAND #WIFE #FRIEND #BABY