‘சம்பள பணத்துக்கு ஒழுங்கா கணக்கு காட்டல’.. கோபத்தில் கணவர் செய்த கொடூரம்.. நாமக்கல் அருகே அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாமக்கல் அருகே மனைவியை சுத்தியலால் தாக்கி கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பெரியபட்டியை சேர்ந்தவர் பரமானந்தம். லாரி டிரைவரான இவரது முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில் மயிலாத்தாள் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.
பரமானந்தம் கொடுக்கும் சம்பளப் பணம் முழுவதையும் வாங்கிகொள்ளும் மயிலாத்தாள் அதற்கு சரியான கணக்குகளை கட்டாததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று பணம் தொடர்பாக மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பரமானந்தம் சுத்தியலால் மனைவியை தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த மயிலாத்தாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மயிலாத்தாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் கணவர் பரமானந்தத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணம் தொடர்பான பிரச்சனையில் மனைவியை சுத்தியால் அடித்து கணவர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
