கணவன் ‘சமைத்ததை’ வாயில் வைத்ததும்... அதிர்ந்துபோய் ‘தலைதெறிக்க’ ஓடிய ‘மனைவி’... உறைந்து நின்ற ‘போலீசார்’...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Mar 10, 2020 04:20 PM

உத்தரப் பிரதேசத்தில் மனைவிக்காக சடலத்தின் உடல் பாகத்தை சமைத்து கொடுத்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

UP Man Cooks Parts Of Human Hand Stunned Wife Rushes To Police

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியில் வசித்து வரும் 32 வயதான நபர் ஒருவடைய மனைவி மளிகை பொருட்கள் வாங்குவதற்காக வார சந்தைக்கு சென்றுள்ளார். அங்கிருந்து அவர் பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு சென்றபோது, அவருடைய கணவர் இரவு உணவை சமைத்துக்கொண்டிருந்துள்ளார். இதையடுத்து சமையல் முடிந்த பிறகு குடிபோதையில் இருந்த கணவருடன் அமர்ந்து அந்தப் பெண் சாப்பிடத் தொடங்கியுள்ளார். பின்னர் கணவர் சமைத்திருந்த அசைவ உணவை வாயில் வைத்த சில நொடியிலேயே அந்தப் பெண் வாந்தி எடுத்துள்ளார்.

அதன்பிறகு அந்த உணவை என்னவென்று பார்த்தபோது தான் அது சடலத்தின் கை என்பது தெரியவந்துள்ளது. அதைப் பார்த்து அதிர்ந்துபோன அந்தப் பெண் தலைதெறிக்க ஓடிச்சென்று அக்கம்பக்கத்தினரிடம் நடந்ததைக் கூறி அழுதுள்ளார். பின்னர் போலீசாருக்கும் இதுபற்றி தகவல் அளிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டுக்குள் இருந்த கணவனை பிடித்து விசாரித்துள்ளனர். விசாரணையில், மதுபோதையில் இருந்த அவர் கங்கை கரைக்கு சென்று அங்கு எரிக்கப்பட்ட பிணங்களிலிருந்து வேகாத கை ஒன்றை வீட்டுக்கு எடுத்து வந்து சமைத்ததாக கூறினார். இதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்துபோன போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர்.

Tags : #CRIME #UTTARPRADESH #HUSBAND #WIFE #HUMAN #HAND #COOK