'மனைவியை சமாதானம் செய்ய... மாமனார் வீட்டுக்கு சென்ற கணவன்!'... வாக்குவாதத்தில் மனைவி செய்த... பதைபதைக்க வைக்கும் கோரம்!... 3 பேர் கைது!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Mar 09, 2020 09:05 PM

புவனகிரி அருகே தொழிலாளியை கத்தியால் குத்திய மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

wife stabbed husband to death in bhuvanagiri police arrests

புவனகிரி அருகே உள்ள சின்னூர் பகுதியை சேர்ந்தவர் கமல்மதி. தொழிலாளி. இவரது மனைவி மயில்வேல் அழகி. இவர்களுக்கிடையே, குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்- மனைவி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மயில்வேல் அழகி, கணவரிடம் கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் கமல்மதி தனது மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வருவதற்காக மாமனார் வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கிருந்தவர்கள் மயில்வேல் அழகியை, கமல்மதியுடன் அனுப்பி வைக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மயில்வேல் அழகி, அவரது உறவினர்கள் உதயகுமார், சாந்தி ஆகிய 3 பேரும் கமல்மதியை தாக்கி, கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதில் பலத்த காயமடைந்த கமல்மதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மயில்வேல் அழகி, உதயகுமார், சாந்தி ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

 

Tags : #CRIME #HUSBAND #WIFE