‘ஹனிமூனுக்கு’ அம்மாவை உடன் அழைத்துச் சென்ற மகள்.. ‘கடைசியில் நடந்த ட்விஸ்ட்’.. ஷாக் கொடுத்த கணவன்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Jan 22, 2020 07:49 PM

மகளின் ஹனிமூனுக்கு சென்ற தாய் கடைசியில் அவரது கணவரையே திருமணம் செய்த சம்பவம் லண்டனில் நிகழ்ந்துள்ளது.

Daughter takes mum on her Honeymoon, Mother pregnant with son in law

லண்டனை சேர்ந்தவர் ஜூலி. இவரது மகள் லாரன் வால். தந்தை இல்லாததால் மகளை பாசமாக வளர்த்துள்ளார். இந்த நிலையில் பால் ஒயுட் என்ற இளைஞருக்கு தனது மகளை திருமணம் செய்து வைத்துள்ளார். சுமார் 15,000 டாலர் செலவு செய்து வெகுவிமர்சையாக திருமணத்தை நடத்தியுள்ளார். இதனை அடுத்து திருமணமான புதுதம்பதிகள் ஹனிமூன் செல்ல முடிவெடுத்துள்ளனர்.

ஆனால் தாயை பிரிந்து நீண்ட நாள்கள் இருக்கமுடியாது என மகள் லாரன் வருந்தியுள்ளார். இதனால் தாயையும் ஹனிமூனுக்கு உடன் அழைத்து செல்ல லாரன் முடிவெடுத்துள்ளார். தாய் ஜூலி முதலில் வர மறுத்துள்ளார். இதனை அடுத்து மருமகன் பால் ஒயுட்டும், மகளும் வற்புறுத்து ஜூலியை ஹனிமூனுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு தனது தாயுடன் பால் ஒயுட் சகஜமாக பழகியதைப் பார்த்து லாரன் வால் சந்தோஷமடைந்துள்ளார்.

ஹனிமூன் முடிந்த சில நாட்கள் கழித்து லாரனின் சகோதரி ஒருவர் தாய் ஜூலியின் செல்போனை யதேர்ச்சையாக பார்த்துள்ளார். அதில் தாய் ஜூலி மற்றும் மருமகன் பால் ஒயுட் இடையேயான ஆபாச உரையாடல்களை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே இதுகுறித்து லாரனிடம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் வீட்டில் விஸ்வரூபமாக வெடித்துள்ளது.

இதனிடையே மகள் லாரன் வாலுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த 7 மாதத்தில் திருமண மோதிரத்தை கழற்றி கொடுத்துவிட்டு, மாமியார் ஜூலியின் வீட்டில் பால் ஒயுட் குடியேறியுள்ளார். அடுத்த 9-வது மாதத்தில் மாமியார் ஜூலிக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து தெரிவித்த மகள் லாரன் வால், ‘எனக்கு கல்யாணம் நீ வந்துவிடு என எனது தாய் எனக்கு போனில் சொன்னார். எனக்கும் பால் ஒயிட்டுக்கு 2004-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2009-ம் ஆண்டு எனது முன்னாள் கணவருடன் என் தாய்க்கு திருமணம் நடந்தது. எனது குழந்தையின் எதிர்காலத்துக்காக நானும் அந்த திருமணத்தில் கலந்து கொண்டேன்’ என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

தனது 19 வயதில் நடந்த இந்த கசப்பான சம்பவத்தை லாரன் வால் தற்போது பத்திரிக்கை ஒன்றின் பேட்டியில் தெரிவித்துள்ளார். தற்போது லாரனின் முன்னாள் கணவர் பால் ஒயுட்டுக்கு வயது 35, மாமியார் ஜூலிக்கு வயது 53 என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #HONEYMOON #PREGNANT #HUSBANDANDWIFE #MOTHER #AFFAIR