‘தாயை’ பார்க்கச் சென்றவர்... தண்டவாளத்தில் ‘சடலமாக’ கிடைத்த ‘பயங்கரம்’... ‘அதிர்ச்சியை’ ஏற்படுத்திய சம்பவம்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jan 24, 2020 11:58 AM

கடம்பூரில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து ஆண் ஒருவர் தலை துண்டாகி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Thoothukudi Young Man Falls From Door Of Moving Train Dies

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் நேற்று காலை இளைஞர் ஒருவர் தலை துண்டான நிலையில் கிடந்துள்ளார். அந்த வழியாக சென்ற ரயில் எஞ்சின் ஓட்டுநர் ஒருவர் அதைப் பார்த்து அதிர்ந்துபோய் இதுபற்றி ரயில் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட, அங்கு விரைந்து சென்ற அவர்கள் அந்த இளைஞரின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இறந்தவரின் சட்டைப்பையில் இருந்த வாக்காளர் அடையாள அட்டையில் இருந்து அவர் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த சுதாகர் என்பது தெரியவந்துள்ளது.

சுதாகருடைய தந்தை சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட, அவருடைய தாய் மட்டும் தனியே சொந்த ஊரில் வசித்து வந்துள்ளார். சுதாகர் கோவையில் தங்கி அங்கு மீன் வியாபரம் செய்துவந்த நிலையில் தாயைப் பார்ப்பதற்காக ஊருக்குச் சென்றவர் மீண்டும் ரயிலில் கோவை கிளம்பியுள்ளார். அப்போது ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் சுதாகர் கதவருகே நின்றுகொண்டு பயணித்துள்ளார்.

அந்த ரயில் கடம்பூர் ரயில் நிலையத்திற்குள் நுழைந்தபோது, தண்டவாளங்கள் இணையும் இடத்தில் குழுங்கியதில் அவர் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார். தண்டவாளத்தின் மீது விழுந்த அவர்மீது ரயில் சக்கரங்கள் ஏறி இறங்கியதில் அவர் தலை துண்டாகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #ACCIDENT #TRAIN #THOOTHUKUDI #MAN #MOTHER