‘என்ன கட்டிக்கலன்னா சூசைட் பண்ணிப்பேன்...’ ‘நியூஸ் பேப்பர்ல வேற ஒரு பொண்ணுக்கூட...’ தொரத்தி தொரத்தி லவ் டார்ச்சர் செய்த பெண்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Mar 13, 2020 06:51 PM

நடிகையின் வீட்டில் பணிபுரியும் பெண் ஒருவர், தன்னை காதலிக்க கட்டாயப்படுத்துவதாக ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

Actress house maid who romanticized auto driver

முந்தைய காலகட்டத்திலிருந்து இன்று வரை பெரும்பாலும் ஆண்களே பெண்களை துரத்தி துரத்தி காதலிப்பதும், காதலித்த பெண் கிடைக்கவில்லை என்றால் அவர்களை தொல்லை செய்வதும், சோக கீதங்களை இசைப்பதுமாக இருப்பார்கள், ஒரு சில விதி விலக்குகளை தவிர. இந்த நிலையில் தற்போது நடந்திருக்கும் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அது போல ஒரு பிரபல சீரியலில் நடிக்கும் ஒரு நடிகையின் வீட்டில் பணிபுரியும் ஒரு பெண், சென்னை சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கார்த்திக்கை காதலித்துள்ளார். கார்த்திக் பிரபல நடிகையின் வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன் தான் ஓட்டுநர் வேலைக்கு சேர்ந்துள்ளார். இவர் அந்த நடிகைக்கு துரத்து உறவினரும் கூட.

கார்த்திக் மீது காதல் கொண்ட அந்த பெண் எந்த தயக்கமும் இன்றி தன்னுடைய காதலை முதலில் அவரிடம்  தெரிவித்துள்ளார். கார்த்திக்கு இந்த காதலில் விருப்பம் இல்லை என்பதால் தனக்கு வீட்டில் பெண் பார்க்கிறார்கள் என்று கூறி மழுப்பியுள்ளார். ஆனால் அந்த பெண் விடாப்பிடியாக தன்னை தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உள்ளார்.

இந்த விஷயத்தை அறிந்த நடிகை கார்த்திக்கை ஓட்டுநர் பணியிலிருந்து நீக்கியுள்ளார். கார்த்திக்கிற்கும் இது நல்லது தான் இனி எந்த வித பிரச்சனையும் இல்லை என்றே நினைத்துக் கொண்டிருந்தார்.

காதலிப்பதை நிறுத்தாத அந்த பெண் இடைவிடாமல் கார்த்திக்கை செல்போனில் அழைத்து தொந்தரவு செய்துள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் தான் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியுள்ளார்.

மேலும் செய்தித்தாளில் பெண் ஒருவருடன் தன்னை தொடர்பு படுத்தி வெளியான செய்தியைப் பார்த்து, அதிர்ந்து போயிருக்கிறார் கார்த்திக். இதனால், தனக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு விடுமோ என்று நினைத்தது உடனடியாக மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்து நடந்த அனைத்தையும் கூறி புகார் பதிவு செய்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் இரு தரப்பினரையும் விசாரித்து வருகின்றனர்.

Tags : #LOVE