'மோதிய வேகத்தில் உருக்குலைந்த கார்கள்'.. 'சம்பவ இடத்திலேயே 4 பேருக்கு நேர்ந்த சோகம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Sep 23, 2019 08:02 PM

சிக்மகளூரு அருகே உள்ள சித்ரதுர்கா மாவட்டம் ஒசதுர்கா தாலுகா கல்கிராமத்தில் நேருக்கு நேர் இரண்டு கார்கள் மோதியதில் உண்டான விபத்தில் இரண்டு கார்களும் சம்பவ இடத்திலேயே உருக்குலைந்தன.

accident near sig mangalore, 4 dead and 6 in critical stage

நேற்று அதிகாலை 2 மணி அளவில், சாலையின் எதிரெதிரே வந்த இரண்டு கார்களும் கண்ணிமைக்கும் நேரத்தில் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேராக மோதிக்கொண்டன. கட்டுப்பாட்டை இழந்து இரண்டு கார்களும் எதிரெதிராக மோதிக்கொண்ட வேளையிலே, இரண்டு கார்களும் மோதிய வேகத்தில் சிதைந்தன.

சம்பவ இடத்துக்கு விரைந்த ஸ்ரீராமபுரா போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இதில் ஒரு காரில் வந்த 3 பேரும், இன்னொரு காரின் டிரைவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 6 பேர் சிகிச்சைக்காக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த 4 பேரின் சடலத்தை மீட்ட போலீஸார் உயிரிழந்தவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் கண்டறிந்ததோடு, அவர்களி சடலங்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Tags : #ACCIDENT #SAD