‘அசுர வேகத்தில் வந்த கார்’.. ‘நொடியில் நடந்த கோர விபத்து’.. ‘3 குழந்தைகள் உட்பட 5 பேர் உடல் கருகி பலியான பயங்கரம்’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Sep 14, 2019 03:45 PM

பெங்களூரு - திருப்பதி நெடுஞ்சாலையில் கார் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்ததில் 5 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

Speeding car overturns explodes on Andhra highway 5 dead

திருப்பதி கோயில் தேவஸ்தானத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருபவர் விஷ்ணு. இவர் தனது மனைவி ஜானவி, மகன் பவன்ராம், மகள் சாய் அஷ்விதா, தங்கை கலா, அவருடைய மகள் பானுதேஜா ஆகிய 5 பேருடன் இன்று காலை பெங்களூருவுக்கு காரில் சென்றுகொண்டிருந்துள்ளார். பெங்களூரு - திருப்பதி நெடுஞ்சாலையில் உள்ள பலமனேரியைக் கடந்ததும் அதிவேகத்தில் சென்றுகொண்டிருந்த இவர்களுடைய கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி தூக்கி வீசப்பட்டுள்ளது.

இதில் சாலையில் உருண்டபடி சென்ற கார் அருகிலிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. கார் முழுவதும் நொடியில் மளமளவெனப் பரவிய தீயில் படுகாயமடைந்த நிலையில் இருந்த விஷ்ணுவின் மனைவி, சகோதரி, குழந்தைகள் உட்பட 5 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் பலத்த தீக்காயங்களுடன் தப்பிய விஷ்ணு பலமனேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags : #ANDHRAPRADESH #CHITTOOR #CAR #ACCIDENT #FIRE #HIGHWAY