'எல்லாமே அவன் தான்'...'மொத்த குடும்பத்தையே பலி வாங்கிய 'கோர விபத்து'... கொடூர சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Sep 16, 2019 03:16 PM

ஓமனில் நடந்த கார் விபத்தில் ஐதராபாத்தை சேர்ந்த தம்பதி உட்பட மொத்த குடும்பமும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

UAE based Indian couple baby die in Oman accident

ஐதராபாத்தை சேர்ந்தவர் கவுசல்லா அஸ்மத்துல்லா கான். துபாயில் பொறியாளராக வேலை செய்து வரும் இவருக்கு ஆயிஷா என்ற மனைவியும்,  3 வயதில் ஹனியா என்ற மகளும் 8 மாத ஹம்சா கான் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் நால்வரும் குடும்பத்துடன் ஓமன் சென்று கொண்டு துபாய்க்கு திரும்பி கொண்டிருந்தார்கள். அப்போது சலாலா என்ற இடத்தின் அருகே கார் வந்தபோது, எதிரே வந்த கார் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. மோதிய வேகத்தில் அஸ்மத்துல்லா சென்ற கார் கவிழ்ந்து உருண்டது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கோர விபத்தில்  அஸ்மத்துல்லா, அவருடைய மனைவி ஆயிஷா, மகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தலையில் பலத்த காயம் அடைந்த 3 வயது ஹனியா மருத்துவமனையில் சிகிசைக்காகச் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். சாலை விபத்தில் மொத்த குடும்பமும் உயிரிழந்த சம்பவம் அங்குள்ள இந்தியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே ஐதராபாத்தில் உள்ள அஸ்மத்துல்லா'வின் இளைய சகோதரர் கூறும் போது ''அஸ்மத்துல்லா தான் எங்கள் குடும்பத்தின் ஆணி வேராக இருந்தார். அவரது குடும்பத்திற்கு இப்படி ஒரு சோகம் நடக்கும் என கனவிலும் நினைக்கவில்லை. தனது கடின உழைப்பால் முன்னேறி துபாயில் வேலைக்கு சென்றவருக்கு இப்படி ஒரு முடிவா'' என கண்ணீர் மல்க கூறினார்.

Tags : #ACCIDENT #OMAN CRASH #INDIAN COUPLE #DUBAI