இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Sep 16, 2019 12:26 PM
1. சென்னையில் பேனர் விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து மக்கள் நீதி மய்யமத்தில் தலைவர் கமலஹாசன் ஆறுதல் கூறியுள்ளார். அப்போது பேசிய அவர், “பேனர் கலாச்சாரம் ஒழிய வேண்டும், இல்லையென்றால் மக்களே அதை ஒழிப்பார்கள். அதற்கு மக்கள் நீதி மய்யம் துணை நிற்கும்” எனக் கூறியுள்ளார்.

2. அடுத்த ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு கேப்டனாக தோனியே நீடிப்பார் என சிஎஸ்கே அணியின் தலைவர் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
3. திருப்பூரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், “ஒருநாள் ஒரு பொழுதாவது விடிவு காலம் பிறக்கும் என்றும் அப்போது தமிழக மக்களை தங்கத் தொட்டிலில் வைத்து தாலாட்டுவேன்” எனக் கூறியுள்ளார்.
4. இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே நடக்கவிருந்த முதல் டி20 போட்டி மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
5. தமிழகத்தில் நவம்பர் மாத இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
6. தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளும், ஊருணிகளும் பொதுப்பணித் துறையின் மூலமாக தூர் வாரப்பட்டு வருகிறது. ஆனால் நான் தான் செய்கிறேன், நானும் ரவுடி தான் நானும் ரவுடி தான் என்று திரைப்படத்தில் வரும் காட்சி போல திமுக விளம்பரம் தேடுகிறது என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
7. இந்திய ராணுவத்தில் 9 ஆண்டுகள் பணியாற்றி உயிரிழந்துள்ள டச்சு நாய்க்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.
8. ஆந்திர சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகரும், தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கோடேலா சிவபிரசாத ராவ் இன்று காலமானார். சிவபிரசாத ராவ் மரணத்துக்கான காரணத்தை மருத்துவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில் ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் தூக்கு மாட்டி அவர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
9. சென்னையில் வாட்ஸ்அப் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐடி ஊழியர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த கும்பலை போலீஸார் கூண்டோடு கைது செய்துள்ளனர்.
10. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பாசன வாய்க்கால் வரப்பில் மறைந்திருந்த 10 அடி நீளமும், 1000 கிலோ எடையும் கொண்ட ராட்சத முதலை பிடிபட்டுள்ளது.
11. சவுதி அரேபிய எண்ணெய் நிறுவனத்தின்மீது நிகழ்த்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதல் காரணமாக கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 20 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
12. தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், நாகப் பட்டினம், அரியலூர், திருவண்ணா மலை, திருச்சி, சிவகங்கை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், மதுரை, விருதுநகர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் வரும் 19-ம் தேதி வரை தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை நீடிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
