‘சொந்த வேலையாக வந்தபோது’... ‘நடுரோட்டில் திடீரென தீப்பிடித்த கார்’... ‘சென்னை அண்ணா சாலையில் பரபரப்பு’

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Sep 13, 2019 11:06 PM

சென்னை அண்ணா சாலையில் கார் ஒன்று, திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

car fire accident in chennai anna salai luckily no one injured

புதுச்சேரியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர், தனது ஓட்டுநருடன், மகேந்திரா வெரிட்டோ காரில், சொந்த வேலையாக இன்று சென்னைக்கு வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும், அண்ணாசாலையில் உள்ள பழைய ஆனந்த் தியேட்டர் எதிரே சென்றபோது, திடீரென காரில் இருந்து புகை வெளியேறியுள்ளது. இதனால் காரை ஓரமாக நிறுத்திவிட்டு, ஓட்டுநரும், பாலசுப்ரமணியனும், புகையை கட்டுப்படுத்த முயற்சி செய்து பார்த்துள்ளனர். எனினும், கட்டுப்பாட்டில் இல்லாமல், கார் தீப்பிடித்து எரிந்தது.

மளமளவென தீ பரவியதால், கார் முழுவதும் தீயில் கருகி நாசமானது. தீ விபத்து காரணமாக அண்ணாசாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர் கொழுந்து விட்டு எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து போக்குவரத்து காவலர்கள் உடனடியாக போக்குவரத்தை சீர் செய்தனர். தீ விபத்து குறித்து காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம், பரபரப்பு நிலவியது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.

Tags : #CHENNAI #CAR #ACCIDENT