'சென்னையில் அரசுப் பேருந்து உரசியதால்'... ‘கடை உரிமையாளருக்கு நேர்ந்த விபரீதம்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Sep 23, 2019 02:47 PM
சென்னையில் அரசுப் பேருந்து மோதியதில், சர்பத் கடை உரிமையாளர் ஒருவர், உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூரைச் சேர்ந்த முருகேசன் என்பவர் மதுரவாயலில் தங்கியுள்ளார். இவர் 100 அடி சாலையில் சர்பத் கடை நடத்தி வந்தார். கடந்த சனிக்கிழமை அன்று அவரது கடைக்கு ஐஸ் கட்டிகள் கொண்டு வரப்பட்டன. அப்போது, சாலையின் விளிம்பில் இடதுபுறமாக நிறுத்தப்பட்ட சரக்கு ஆட்டோவில் இருந்து, ஐஸ் கட்டி பெட்டிகளை அவர் தனது கடைக்கு இறக்கிக் கொண்டிருந்தார். சரக்கு ஆட்டோவுக்கு வலப்புறமாக முருகேசன் நின்று கொண்டிருந்தபோது, கிண்டி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து அவர் மீது உரசியது.
இதில் கீழே விழுந்த முருகேசனின் பின்னந்தலை பலமாக அடிபட்டதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு சென்ற கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், முருகேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய அரசுப் பேருந்து ஓட்டுநர் தீபனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. சாலையின் ஓரமாக நிற்காமல், கவனக் குறைவாக சர்பத் கடை உரிமையாளர் செயல்பட்டதே விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.