'பிறந்து சில நிமிடங்களே ஆன பச்சிளம் குழந்தை'.. தாய் செய்த 'உறையவைக்கும்' காரியம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Sep 19, 2019 05:36 PM

பச்சிளம் குழந்தையை மருத்துவமனை வளாகத்தில் அநாதையாக தவிக்கவிட்டுப் போயிருக்கும் தாயின் பகீர் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்து.

mother stabbed newborn girl baby and throws heartbreaking

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பிறந்து சில நிமிடங்களிலேயே, அழகான பச்சிளம் பெண் குழந்தையை தாய் விட்டுவிட்டு எங்கோயோ சென்றதை அடுத்து அந்த குழந்தை மீட்கப்பட்டுள்ளது. அதுவும் அந்த குழந்தையை ஒரு பையில் சுற்றி, சிதம்பரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நீர்தேக்க தொட்டி அருகே பொட்டலம் போன்று போட்டுவிட்டு அந்தத் தாய் சென்றுள்ளார்.

இதனால் சில நிமிடங்களாகவே அந்த பாலிதீன் பை போன்ற பைக்குள் மூச்சுத் திணறிக்கொண்டிருந்த குழந்தையை அங்கிருந்த செவிலியர்கள் உடனடியாக மீட்டு, அதன் தொப்புள் கொடியை அகற்றி சுத்தம் செய்துள்ளனர். இதனையடுத்து குழந்தையை கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்க ஆலோசனை நடைபெற்று வருகிறது.

மேலும், பெண் குழந்தை என்பதால் அந்தத் தாய் இவ்வாறு வீசிவிட்டு சென்றாரா அல்லது உண்மையில் குழந்தையின் தாய்தான் குழந்தையை இவ்வாறு வீசிவிட்டு சென்றாரா என்பன போன்ற கோணத்தில் போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Tags : #CUDDALORE #BABY #GIRL #MOTHER #SAD #HOSPITAL