‘லாரி மீது நேருக்கு நேர் மோதிய கார்’.. ‘முந்த முயன்றபோது நொடியில் நடந்த பயங்கர விபத்து’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Sep 21, 2019 06:15 PM

நாமக்கல் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரு வயது குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

5 dead including 1 yo baby in Lorry Car accident near Namakkal

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்த சரவணன், அவருடைய மனைவி வசந்தி மற்றும் ஒரு வயது ஆண் குழந்தை பிரிஜன் ஆகியோருடன் கோவிலுக்குச் சென்றுவிட்டு காரில் திரும்பிக்கொண்டிருந்துள்ளார். காரை ராஜேந்திரன் என்பவர் ஓட்ட உடன் சரவணனின் உறவினர்களான கேசவன், கண்ணம்மாள் ஆகியோரும் இருந்துள்ளனர்.

கார் எருமைப்பட்டியை அடுத்த வரகூர் அருகே சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநர் முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்றுள்ளார். அப்போது எதிர்திசையில் வந்த லாரி மீது கார் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் சரவணன், குழந்தை பிரிஜன், ராஜேந்திரன், கேசவன், கண்ணம்மாள் ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த வசந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள எருமைப்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #TAMILNADU #LORRY #CAR #ACCIDENT #FAMILY #TAMPLE #BABY #DEAD #HUSBAND #WIFE