'இந்தா விழுந்துருச்சுல்ல.. 'மீண்டும் பேனர் விழுந்து படுகாயம்.. மருத்துவமனையில் சிகிச்சைபெறும் டாஸ்மாக் ஊழியர்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Sep 13, 2019 06:35 PM

சாலையில் வைக்கப்பட்டிருந்த ராட்சத பேனர் சரிந்து விழுந்ததால் எதிர்பாராத விதமாக விழுந்து தண்ணீர் லாரியின் அடியில் சிக்கி உயிரிழந்த சுபஸ்ரீயின் இழப்பு தமிழகத்தையே கலங்க வைத்துள்ளது.

another tasmac staff get injured after banner fell down

இதனையடுத்து சாலைகளில் பேனர் வைக்கும் கலாச்சாரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. இதேபோல் அரசியலாளர்களும் தங்களுடைய நிலைப்பாடுகளை முன்வைத்துக்கொண்டு வருகின்றனர். நீதிமன்றமோ, சுபஸ்ரீயின் விபத்தை தாமாக முன்வந்து வழக்காக எடுத்துக்கொள்ள வலியுறுத்தப்பட்டதன் பேரில் விசாரித்து வருகிறது.

இப்படி தமிழ்நாடு அலறிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் வேலூர் அருகே உள்ள காவேரிப்பாக்கத்தில், உள்ள சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில், இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த டாஸ்மாக் ஊழியர் மீது அங்கு திருமணத்துக்காக வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்தது.

சம்பவ இடத்திலேயே காயமடைந்த அவரை காவலர்கள் மீட்டு அருகில் உள்ள வாலஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

Tags : #ACCIDENT #BANNER