'சேலம்' பியூட்டி பார்லர் பெண் 'மர்ம' மரணம்..கொலையா? தற்கொலையா?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Sep 23, 2019 07:38 PM

சேலம் அழகாபுரம் பகுதியில் ஏராளமான பியூட்டி பார்லர்கள் உள்ளன.அதில் ஒன்றில் மிசோரம் மாநிலத்தை சேர்ந்த எஸ்தர்(28) என்ற பெண் வேலை செய்து வந்தார்.இவர் நேற்றிரவு தனது நண்பர்களுடன் நூடுல்ஸ் சாப்பிட்டுள்ளார்.இன்று காலை வெகு நேரமாகியும் எஸ்தர் எந்திரிக்கவில்லை.சக ஊழியர்கள் அவரை எழுப்பியபோது அவர் மூச்சு பேச்சற்று மயக்கத்தில் இருந்துள்ளார்.இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அவரை சேலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Beauty Parlor Female Employee Mystery Death in Salem

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சேலம் போலீசார் இந்த வழக்கை தற்போது விசாரித்து வருகின்றனர். போலீஸ் விசாரணையில் எஸ்தர் சாப்பிடும் முன் மது அருந்தியதாக கூறப்படுகிறது.மேலும் எஸ்தர் வேலை செய்துவந்த பியூட்டி பார்லரில் இருந்து ஏராளமான மது பாட்டில்களையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.இதனால் இது கொலையா? அல்லது தற்கொலையா?என்ற கோணத்தில் போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.

 

Tags : #SALEM #MURDER