‘டிரைவரின் அலட்சியத்தால்’.. ‘பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கிய’.. ‘2 வயது குழந்தைக்கு நொடியில் நடந்த பரிதாபம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Sep 17, 2019 04:30 PM

மதுரை அருகே சாலையோரம் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது சிறுமி பள்ளி வாகனம் மோதி உயிரிழந்துள்ளார்.

2 YO girl baby crushed to death by private school van in Madurai

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த அம்பட்டையம்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் - பால்பாண்டியம்மாள் தம்பதியின் மகள் மனிஷா. 2 வயதான மனிஷா வீட்டருகே சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த தனியார் பள்ளி வேன் ஒன்று அவர் மீது மோதியுள்ளது. அதில் வேனின் சக்கரங்கள் ஏறி சம்பவ இடத்திலேயே மனிஷா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். வேனில் ஓட்டுநருடன் இருக்க வேண்டிய உதவியாளர் இல்லாத நிலையில் குழந்தைகளை ஏற்றியபின் கவனக்குறைவுடன் வேனை பின்பக்கமாக இயக்கியதாலேயே இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது. விபத்தை ஏற்படுத்திய வேன் ஓட்டுநரை கைது செய்துள்ள போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #MADURAI #SCHOOLVAN #2YEAROLD #GIRL #ACCIDENT