‘அதிவேகத்தில் வந்த எம்.எல்.ஏ-வின் காரால்’.. ‘நொடியில் நடந்த பயங்கரம்’.. ‘அடுத்து அவர் செய்த அதிரவைக்கும் காரியம்’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Sep 16, 2019 04:12 PM

தெலுங்கானாவில் எம்.எல்.ஏ ஒருவரின் கார் மோதி சாலையோரம் சென்றுகொண்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Telangana MLA mows down pedestrian flees scene of accident

தெலுங்கானா மாநிலத்தின் ஆளும் ராஷ்டிரிய சமிதி கட்சியின் கல்வகுர்தி தொகுதி எம்.எல்.ஏ ஆக இருப்பவர் ஜெய்பால் யாதவ். இவர் தன்னுடைய இன்னோவா காரில் நேற்று இரவு ஹைதராபாத்திலிருந்து கல்வகுர்தியை நோக்கி சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது அவருடைய கார் சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்த ஜகநாத் (40) என்பவர் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜகநாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விபத்தின்போது காருக்குள் இருந்த ஜெய்பால் யாதவ் காயம் எதுவும் இன்றி உயிர் தப்பியுள்ளார். நேற்று இரவு 8 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தின்போது விபத்து நடந்ததும், காயமடைந்தவருக்கு உதவாமல் ஜெய்பால் யாதவ் மற்றொரு காரில் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் கார் ஓட்டுநரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். கார் அதிவேகத்தில் சென்றதே விபத்துக்குக் காரணம் எனக் கூறியுள்ள அப்பகுதி மக்கள் இதற்கு உரிய நீதி கிடைக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : #TELANGANA #MLA #CAR #ACCIDENT #PEDESTRIAN #SHOCKING #DEAD