‘பைக்கில் முந்தி செல்ல முயன்று நொடியில்’... ‘அரசுப் பேருந்து மீது மோதி’... ‘இளைஞர்களுக்கு நேர்ந்த கொடூரம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Sep 16, 2019 06:27 PM

கிருஷ்ணகிரி அருகே அரசு பேருந்தின் மீது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில், 3 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3 young men met accident near krishnagiri 3 died

மல்லபாடி கிராமத்தை சேர்ந்தவர் சோமேஷ்வரன் என்கின்ற இளைஞர். இவர் தனது நண்பர்கள் இருவருடன், இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார். பர்கூர் அடுத்த தபால்மேடு பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது முன்னே சென்ற வாகனத்தை முந்தி செல்வதற்காக, இருசக்கர வாகனத்தை, சோமேஷ்வரன் அதிவேகமாக  ஓட்டிச் சென்றுள்ளார். அந்த சமயத்தில், எதிர்திசையில் கிருஷ்ணகிரியில் இருந்து திருப்பத்தூரை நோக்கி அரசுப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. இதனைக் கவனியாமல், சோமேஷ்வரன் சென்றபோது, நேருக்கு நேராக அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற சோமேஷ்வரனும், அவரது 2 நண்பர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார், மூவரின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினரின் விசாரணையில், ஒரே இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணித்ததும், ஹெல்மெட் அணியாமலும், அதிவேகமாக சென்றதே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

Tags : #ACCIDENT