‘நொடிப்பொழுதில் தடம் புரண்ட பயணிகள் ரயில்’.. ‘கோர விபத்தில் 50 பேர் பலி’.. ‘பதைபதைக்க வைக்கும் சம்பவம்’..
முகப்பு > செய்திகள் > உலகம்By Saranya | Sep 13, 2019 06:48 PM
காங்கோவில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டிலுள்ள டாங்கான்கியா மாகாணத்தில் நேற்று அதிகாலை 3 மணியளவில் சென்றுகொண்டிருந்த பயணிகள் ரயில் ஒன்று திடீரென தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கோர விபத்தில் முதல் கட்டமாக 50 பேர் பலியாகி இருக்கலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மீட்புக் குழுவினர் படுகாயமடைந்துள்ள பலரை மீட்டு அருகிலுள்ள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
Tags : #AFRICA #CONGO #TRAIN #ACCIDENT
