‘லாரியை முந்த முயன்ற’.. ‘வேன் கவிழ்ந்து பயங்கர விபத்து’.. ‘சிறுவன் உட்பட 4 பேர் உயிரிழந்த பரிதாபம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Sep 14, 2019 07:17 PM

சிவகாசி அருகே பட்டாசு ஆலை தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வேன் கவிழ்ந்த விபத்தில் சிறுவன் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

virudhunagar 4 dead 12 injured in van accident

சிவகாசி அருகே உள்ள சூரநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பட்டாசு ஆலை தொழிலாளர்கள் சிலர் இன்று காலை வேனில் வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். சுப்பிரமணியபுரம் அருகே முன்னாள் சென்ற லாரியை முந்த முயன்றபோது, வலது புறத்தில் பள்ளம் இருந்ததால் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் குருமுத்து (30), துரைப்பாண்டி (16), கார்த்திக் ராஜா (22) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் விபத்தில் பலத்த காயமடைந்த 2 வயது குழந்தை உட்பட 12 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சுந்தரமூர்த்தி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள வெம்பக்கோட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #SIVAKASI #FIREWORK #FACTORY #WORKERS #VAN #ACCIDENT