‘ஹாஸ்டலில் அசந்து தூங்கிக்கொண்டிருந்த மாணவி’.. ‘ரூமுக்குள் நுழைந்த நல்லபாம்பு’.. நெஞ்சை பதற வைத்த சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Sep 15, 2019 06:18 PM

தனியார் பள்ளியின் விடுதியில் தூங்கிக்கொண்டிருந்த மாணவியை பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

9th std school girl died of snake bite in hostel in Dindigul

கொடைக்கானலைச் சேர்ந்த வர்ஷா என்ற மாணவி திண்டுக்கலில் உள்ள தனியார் பள்ளியில் 9 -ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அங்குள்ள தனியார் பள்ளியின் விடுதியிலேயே மாணவி தங்கிப் படித்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு மாணவி விடுதி அறையில் தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது சுமார் 5 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று வர்ஷாவை கடித்துள்ளது.

இதனையறிந்த உடனிருந்தவர்கள் மாணவியை உடனே திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மாணவி அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கு விடுதியில் உரிய பாதுகாப்பு இல்லாததே காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் விடுதியில் பாம்பு கடித்து மாணவி உயிரிழந்த சம்பவம் சக மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #SNAKEBITE #SCHOOLGIRL #DIED #DINDIGUL #HOSTEL