‘மூடாமல் விடப்பட்ட பாதள சாக்கடை’.. ‘ஒரு நொடியில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்’.. நெஞ்சை உலுக்கிய வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Sep 07, 2019 05:34 PM

மெக்சிக்கோவில் வெள்ளத்தில் சிக்கிய இளம்பெண் மூடப்படாத பாதாள சாக்கடைக்குள் விழுந்து உயிரிழந்த வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

WATCH: 17 year old girl falls down a drain in Mexico

மெக்சிக்கோவில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை 17 வயதான பள்ளி சிறுமி வெள்ளித்தில் சிக்கி தத்தளித்துள்ளார். அப்போது காரைப் பிடித்துக்கொண்டு நின்ற பெண்ணிடம் சிறுமி உதவிகரம் நீட்டியுள்ளார்.

அப்பெண்ணின் கையை பிடிக்கும் தருவாயில் வெள்ள நீரால் சிறுமி அடித்து செல்லப்பட்டுள்ளார். அப்போது சாலையில் மூடாமல் விடப்பட்டிருந்த பாதாள சாக்கடைக்குள் சிறுமி விழுந்து பரிதாபமாக உயிரந்துள்ளார். இந்நிலையில் கடந்த வெள்ளியன்று அலெக்ஜாண்ட்ரா என்னும் பகுதியில் சிறுமியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #GIRL #MEXICO #FLOOD #DIED #DRAINAGE