ப்பா 'என்ன' ஒரு ஆட்டம்..7 பந்துகளில் 7 சிக்ஸர்கள் 'தெறிக்க' விட்ட கூட்டணி-வீடியோ உள்ளே!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Manjula | Sep 15, 2019 03:53 PM
ஆப்கானிஸ்தான்,ஜிம்பாப்வே,வங்கதேசம் ஆகிய 3 நாடுகளும் மோதும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் தொடங்கியது.இதன் முதல் போட்டியில் வங்கதேச அணி, ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது. இரண்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த ஆப்கான் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்களைக் குவித்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் 169 ரன்களை எடுத்து 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
ஆப்கான் அணி பேட்டிங் செய்தபோது போட்டியின் 17-வது ஓவரில் நபி தொடர்ச்சியாக 4 சிக்ஸர்கள் பறக்க விட்டார். அடுத்த ஓவரின் முதல் 3 பந்துகளிலும் நஜிபுல்லா சட்ரான் சிக்ஸர்கள் அடிக்க, தொடர்ந்து 7 பந்துகளில் 7 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு இருவரும் 42 ரன்களைக் குவித்தனர்.ஆட்டத்தின் திருப்புமுனையாக இந்த சிக்ஸர்கள் அமைந்தது குறிப்பிடத்தக்கது.
YouTube Credit:Tamil Extra
