சாலையை கடக்கும்போது பெண் மீது மோதிய போலீஸ் வேன்..! அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Sep 06, 2019 06:24 PM

கோவையில் சாலையில் நடந்து சென்ற பெண் மீது போலீஸ் வாகனம் மோதிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

A woman died for accident by Police van in coimbatore

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள முத்தன்ன குளத்தில் விநாயகர் சிலை கரைக்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதனால் அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதிக்கு காவலர்களை இறக்கி விடுவதற்காக போலீஸ் வாகனம் ஒன்று வந்துள்ளது.

அப்போது காவலர்களை இறக்கிவிட்டு வாகனம் கிளம்பும்போது பெண் ஒருவர் போலீஸ் வாகனத்தின் முன்னே சென்றுள்ளார். இதனைக் கவனிக்காத ஓட்டுநர் வாகனத்தை வேகமாக ஓட்டியதால் அப்பெண்ணின் மீது வேன் மோதியது. இந்த விபத்தில் அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் பலியான பெண் பேரூர் பகுதியைச் சேர்ந்த கலா (55) என்பது தெரிவந்துள்ளது. இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

Tags : #ACCIDENT #CCTV #COIMBATORE #POLICEVAN #WOMAN #DIED