‘கல்யாணத்துக்கு காரில் வேகமாக போன புது மாப்பிள்ளை’.. நொடியில் நடந்த விபத்து..! பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Sep 11, 2019 12:39 PM

மதுரையில் கார் மோதி துப்புரவு தொழிலாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

WATCH: Car accident in Madurai caught on CCTV camera

மதுரை கோமதிபுரத்தில் இன்று துப்புரவு பணிக்கு சைக்கிளில் சென்றுகொண்டிருந்த துப்புரவு பணியாளர் மீது கார் ஒன்று மோதியது. இதில் படுகாயம் அடைந்த துப்புரவு பணியாளர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 3 பேர் காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகி வந்துள்ளது.

இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரை கைது செய்துள்ளனர். இதனை அடுத்து கார் ஓட்டுநரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் மதுரை மேலமடையைச் சேர்ந்த ஜெகன்நாதன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவருக்கு இன்று திருமணம் நடக்க இருந்துள்ளது. திருமணத்திற்காக மண்டபத்துக்கு செல்லும் வழியில் எதிர்பாராதவிதமாக விபத்து நடந்ததால் ஜெகன்நாதனின் திருமணம் நின்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

Tags : #CCTV #ACCIDENT #MADURAI #DIED #CAR