‘தனியே கழன்று சென்ற டயர்கள்’.. வந்த வேகத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Aug 22, 2019 02:53 PM

சாலையில் சென்றுகொண்டிருந்தபோது லாரியின் முன்பக்க டயர் கழன்று விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Lorry accident near Vedasandur in Dindigul district

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து சுமார் 4 லட்சம் மதிப்புள்ள மெழுகு லோடுகளை லாரியில் ஏற்றிக்கொண்டு சரவணன் என்பவர் குடியாத்தம் நோக்கி சென்றுள்ளார். கரூர்-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை வழியாக லாரி சென்றுகொண்டு இருந்துள்ளது அப்போது வேடசந்தூர் என்னும் ஊரின் அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக திடீரென லாரியின் முன் சக்கரங்கள் தனியாக கழன்றுள்ளது.

இதனால் நிலைதடுமாறிய லாரி வந்த வேகத்தில் சாலையில் கவிழ்ந்துள்ளது. இதில் லாரியில் ஏற்றிவரப்பட்ட 4 லட்சம் மதிப்பிலான மெழுகு பொருள்களும் சாலையில் விழுந்து விணாகியுள்ளது. அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் லாரி டிரைவர் உயிர் தப்பினார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags : #ACCIDENT #LORRY #DINDIGUL